குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் இதுவரை ஏழு குழந்தைகள், 3 - 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை..

by Admin / 19-10-2023 10:31:45am
 குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் இதுவரை ஏழு குழந்தைகள், 3 - 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை..

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் இதுவரை ஏழு குழந்தைகள், 3 - 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது...

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், மூன்றாவது பிரசவத்துக்கு வரும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, பிறக்கும் குழந்தையை, இடைத்தரகர் வாயிலாக மகப்பேறு டாக்டர் அனுராதா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது..இதைத் தொடர்ந்து, டாக்டர் அனுராதா, தரகர் லோகாம்பாள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்க மருத்துவ குழு மற்றும் காவல் துறை ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவின் முதற்கட்ட விசாரணையில், பெற்றோரிடம் பெண் குழந்தைக்கு 3,000 ரூபாய்; ஆண் குழந்தைக்கு 5,000 ரூபாய் கொடுத்து வாங்கி, அவற்றை குழந்தை இல்லாத தம்பதியரிடம் விற்றுள்ளனர். அதன்படி, தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை, ஏழு குழந்தைகளை, அக்கும்பல் விற்றுள்ளதாக, விசாரணையில் தெரிய வந்துள்ளது.குழந்தைகளை, 3 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசி விற்பனையில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், 2019ல் கொல்லிமலையில் குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்ட கும்பலுக்கு, இந்த விவகாரத்திலும் தொடர்பு உள்ளது அம்பலமாகி உள்ளது.

 

 குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் இதுவரை ஏழு குழந்தைகள், 3 - 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை..
 

Tags :

Share via