மம்தா பானர்ஜிக்கு பிரதமராகும் வாய்ப்பு உள்ளதா..

by Staff / 11-04-2024 02:09:14pm
மம்தா பானர்ஜிக்கு பிரதமராகும் வாய்ப்பு உள்ளதா..

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் மக்களவை தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்றும், மம்தா பானர்ஜி அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சவுகதா ராய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடந்து மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை வெற்றிகரமாக வகித்து வரும் மம்தாவுக்கு பிரதமராகும் அத்தனை தகுதியும் உள்ளது என்றார்.எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், என்சிபி, ஆம் ஆத்மி, ஆர்ஜேடி, சமாஜ்வாதி உள்ளிட்ட 28க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.

 

Tags :

Share via