பயங்கர விபத்து - 7 பெண்கள் பலி
திருப்பத்தூர், வாணியம்பாடி அருகே இன்று அதிகாலை வேன் மீது லாரி மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேனில் சுற்றுலா சென்று வீடு திரும்பியபோது லாரி மோதி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















