சமூக வலைதளம் மூலம் அறிமுகமான பெண் பலாத்காரம்
மும்பையில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி நடந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஸ்னாப்சாட் என்ற சமூக ஊடகத்தில் 20 வயது இளைஞருக்கு பள்ளி படிக்கும் மாணவி அறிமுகமானார். இருவரும் அதன் மூலம் சாட்டிங் செய்து பழகி வந்துள்ளனர். தொடர்ந்து இருவரும் ஒரு நாள் நேரில் சந்திக்க விரும்பியுள்ளனர். இந்த நிலையில், சிறுமியை உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியதையடுத்து, அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
Tags :



















