ஓட்டுனர் அவரே இயக்கி வந்த சரக்கு லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்

சாலையில் சென்று கொண்டு இருந்த சரக்கு லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரின் மீது மோத முயற்சி - வெளியே குதித்து உயிர் தப்ப முயற்சித்த ஓட்டுனர் அவரே இயக்கி வந்த சரக்கு லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரது மகன் ராமகிருஷ்ணன் (62) திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு பழைய பேப்பர் பண்டல்களை சரக்கு லாரியில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தார்..அப்போது இனாம்மணியாச்சி அருகே இன்று காலையில் சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் இருந்த தடுப்புச் சுவர் மீது மோத முயற்சித்த போது ஓட்டுனர் ராமகிருஷ்ணன் லாரியின் இருக்கையில் இருந்து வெளியே குதித்து தப்பிக்க முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக அவர் இயக்கிய லாரியின் பின்புற சக்கரத்தில் சிக்கிக் கொண்டார்.இதில் அவர் இடுப்புப் பகுதியில் பலமான காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீசார் மற்றும் ரோந்து போலீசார் அவரது உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.இதனால் அப்போதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags :