சுங்கச்சாவடி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்-வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

by Editor / 01-10-2022 07:50:26am
சுங்கச்சாவடி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்-வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில்  ஊழியர்கள்ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுங்கச்சாவடி நிர்வாகத்தினர்  26 ஊழியர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ததை கண்டித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாஸ்ட் ட்ராக் முறையில் கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம் காரணமாக சென்னை திருச்சி நான்கு வழி சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் கட்டணம் இல்லாமல் செல்கிறது.சுங்கச்சாவடி ஊழியர்களின் போராட்டம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo