திருமாந்துறை சுங்கச்சாவடியில் சுங்கவரி செலுத்தாமல் இலவசமாக செல்லும் வாகன ஓட்டிகள்

by Editor / 01-10-2022 07:52:55am
திருமாந்துறை சுங்கச்சாவடியில் சுங்கவரி செலுத்தாமல் இலவசமாக செல்லும் வாகன ஓட்டிகள்

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களுக்கு ஃபாஸ்ட் டேக் முறையில் சுங்கவரி வசூலிக்கப்படுவதால், திருமாந்துறை மற்றும் செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடி நிர்வாகம் 25க்கும் மேற்ப்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

இதனை கண்டித்து, திருமாந்துறை மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 120க்கும் மேற்ப்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில்உள்ள திருமாந்துறை மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாடியில், சுங்கவரி செலுத்தாமல் வாகன ஓட்டிகள் இலவசமாக சென்று வருகின்றனர்.

சுங்கச்சாவடி ஊழியர்களின் இந்த திடீர் போராட்டம் காரணமாக அசம்பாவிதம் நிகழாமல் இருக்க அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo