புழல் ஏரிக்கு நீர்வரத்து 255 கன அடியாக குறைந்தது. 

by Editor / 28-11-2024 09:58:51am
புழல் ஏரிக்கு நீர்வரத்து 255 கன அடியாக குறைந்தது. 

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 3,300 மில்லியன் காண அடியில் தற்போது 2353 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. புழல்  ஏரிக்கு வினாடிக்கு 672 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் இன்று 255 கன அடியாக குறைந்தது. சென்னை குடிநீருக்காக 209 கன அடி அனுப்பப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 1081 மில்லியன் கன அடியில் தற்போது 117 மில்லியன் காண அடி நீர் இருப்பு உள்ளது இந்த ஏரிக்கு வினாடிக்கு 36 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் இன்று நீர் வரத்து முற்றிலுமாக நின்றது.


 

 

Tags : புழல் ஏரிக்கு நீர்வரத்து 255 கன அடியாக குறைந்தது. 

Share via