நூறு நாள் வேலை திட்டத்தில் ஆதார் இணைப்பு கட்டாயம்: வைகோ கண்டனம்

by Staff / 03-01-2024 02:17:24pm
நூறு நாள் வேலை திட்டத்தில் ஆதார் இணைப்பு கட்டாயம்: வைகோ கண்டனம்

ஆதார் இணைப்பு கட்டாயம் என்றால் மாகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் நோக்கம் முழுமையாகச் சீர்குலைந்து விடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ விடுத்துள்ள அறிக்கையில், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு எனும் நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவோருக்கான ஊதியம், தற்போது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் திட்டங்கள் அனைத்திலும், பயனாளிகளுக்கே உரிய தொகை செல்வதை உறுதி செய்யும் வகையில், வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இணைக்கப்படும் ஆதார் எண் சரிபார்க்கப்பட்டு, அதனடிப்படையில் வங்கிக் கணக்கில் சம்பளத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது.
 

 

Tags :

Share via

More stories

Logo