இருசக்கரவாகனத்தில் இருந்து விழுந்த 12 ஆம் வகுப்பு மாணவன் பலி.
தென்காசி மாவட்டம் குடியிருப்பை சேர்ந்த மாணவர்கள் 3 பேர் மற்றும் காசிமேஜர்புரத்தை சேர்ந்த மாணவர் 1 என மொத்தம் 4 மாணவர்கள் மேலகரத்திலுள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.இன்று காலை இவர்கள் 4 பேர்களும் இருசக்கரவாகனத்தில் டியூசன் சென்றுவிட்டு காசிமேஜர்புரத்தை சேர்ந்த மானவனை வீட்டில் விட்டுவிட்டு 3 பேர்களும் குற்றாலம் பேருந்து நிலையம்முன்பு வரும்போது முன்னே நாய் சாலையின் குறுக்கே வந்ததால் பிரேக் பிடிக்கவே பின்னால் இருந்த மாணவன் முத்துக்குமார் கீழே விழுந்துள்ளார்.அப்போது பள்ளி மாணவன் மீது குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த மேல்மருவத்தூர் பக்தர்கள் வேன் மோதி சம்பவ இடத்தில் மாணவர் பலியானர்.சம்பவ இடத்திற்கு குற்றாலம் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Tags : குற்றாலம் பேருந்து நிலையம் முன்பு இருசக்கரவாகனத்தில் இருந்து விழுந்த 12 ஆம் வகுப்பு மாணவன் பலி.