தகராறில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு

பட்டுக்கோட்டையில் பணம் கொடுக் கல் வாங்கல் தகராறில் பெண் உள்பட மூன்று பேரை அரிவாளால் வெட்டிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட ஆனை விழுந்தான் குளத்தெரு பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சங்கீதா மற்றும் கீதா ஆகிய இரு குடும்பங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு கீதா மற்றும் அவரைச் சார்ந்தவர்கள், சங்கீதா மற்றும் அவரது தந்தை பழனிச்சாமி, தாய் சாந்தி உள்பட மூன்று பேரையும் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.காயமடைந்த மூவருக்கும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து, தஞ்சை மருத்துவக்கல்லூரிமருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்ட்டனர்.இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :