பொன்முடிக்கு முக்கிய பதவி.. திமுக தலைமை திட்டம்?
சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி திமுகவில் துணைப் பொதுச் செயலாளர் பதவியை இழந்ததோடு, அமைச்சரவையில் இருந்தும் பொன்முடி நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவருக்கு மீண்டும் மாநில அளவில் முக்கிய பதவியை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரத்தில் 'ஓரணியில் தமிழ்நாடு' எனும் இயக்கத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு பொன்முடிக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு அவருக்கு விரைவில் மாநில அளவிலான பதவி மீண்டும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Tags :



















