பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து.. 20 பேர் பலி

by Staff / 03-05-2024 11:26:57am
பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து.. 20 பேர் பலி

பாகிஸ்தானில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயம் அடைந்தனர். இராவல்பிண்டியில் இருந்து கில்கிட் பல்டிஸ்கானுக்கு 30 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், தியாமர் மாவட்டத்தில் உள்ள காரகோரம் நெடுஞ்சாலையில் வந்தபோது, ​​பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் பேருந்து முற்றிலுமாக நொறுங்கியது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo