ஜல்லி, எம்-சாண்ட் இரு மடங்கு விலை உயர்வை கண்டித்து அரசு ஒப்பந்தகாரர்கள் 3000க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம்

ஜல்லி, எம்-சாண்ட் இரு மடங்கு விலை உயர்வை கண்டித்து திருவாரூரில் அரசு ஒப்பந்தகாரர்கள், கட்டுனர் மற்றும் கட்டுமான பொறியாளர் சார்பில் உண்ணாவிரத போராடடம். 3000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஜல்லி மற்றும் எம்-சாண்ட் போன்றவற்றை திடீரென எந்தவித முன்னறிவிப்பின்றி 100 சதவீதம் இருமடங்கு விலையேற்றத்தை கண்டித்தும், மாநில முழுவதும் ஒரே விலையில் ஜல்லி, எம்.சான்ட் வழி வகை செய்ய ட்ரான்சிட் பாஸ் ரத்து செய்ய கோரி தமிழ்நாடு அரசு ஒப்பந்தகாரர்கள், அகில இந்திய கட்டுமான சங்கம், கட்டுமான பொறியாளர் சங்கம் கூட்டமைப்பு மற்றம் கட்டுமான தொழிலாளர் சங்கம் மற்றும் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை ஜல்லி எம் சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் உயர்த்தப்பட்ட விலையில் இருந்து 20 சதவீதம் குறைத்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன. முழுமையாக விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
மேலும் டிரான்சிட் பாஸ் முறையை ரத்து செய்திட வேண்டும் மேலும் எம் சான்று உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்வு காரணமாக கட்டுமான தொழில்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது
Tags : ஜல்லி, எம்-சாண்ட் இரு மடங்கு விலை உயர்வை கண்டித்து உண்ணாவிரதம்