விருதுநகர் பெண் கூட்டு பாலியல் வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடிவசம் ஒப்படைப்பு

விருதுநகரில் பட்டியலினஇளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 4 பள்ளி சிறுவர்கள் மற்றும் அரசியல் கட்சியின் பிரமுகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இவ்வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அதன்பேரில், வழக்கு ஆவணங்கள் அனைத்தும் காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் வினோதினியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை டிஜிபி சைலேந்திரபாபு நேரடியாக கண்காணிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில், சிறப்பு அதிகாரியாக சிபிசிஐடி கண்காணிப்பாளர் முத்தரசியும் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த வழக்கு தற்போது வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது.
Tags : Handing over of Virudhunagar list female collective sex case documents to CPCID