வெள்ளை முள்ளம்பன்றி, டாமரின் குரங்கு : தாய்லாந்திலிருந்து கடத்திவந்த நபர் கைது

by Staff / 16-05-2022 04:48:46pm
வெள்ளை முள்ளம்பன்றி, டாமரின் குரங்கு : தாய்லாந்திலிருந்து  கடத்திவந்த நபர் கைது

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளையும்  உடமைகளையும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த ஒரு வாலிபரின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்தனர். அட்டைப்பெட்டி மற்றும் துணியால் செய்யப்பட்ட  கூடைக்குள் வெள்ளை நிற முள்ளம்பன்றி, மற்றும் டாமரின் மங்கி எனப்படும் வெளிநாட்டு  குரங்கு குட்டியையும் வைத்திருந்தார். 

இதை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் வாலிபரை நிறுத்தி  விசாரணை நடத்தினர். வெளிநாட்டில் இருந்து  வளர்ப்பதற்காக வாங்கி வருவதாகவும் கூறினார். ஆனால் அவரிடம்  அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை. மேலும்  வெளிநாட்டில் இருந்து வனவிலங்கு போன்ற உயிரினங்களை வாங்கி வரும்போது சர்வதேச வன விலங்கு பாதுகாப்பு துறையிடம் தெரிவித்து, இந்திய வனவிலங்குப் பாதுகாப்பு துறைக்கும் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். அந்த உயிரினங்களில் நோய்க்கிருமிகள் எதுவும் இல்லை என்ற மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

ஆனால் அவரிடம் அவைகள் எதுவும் இல்லைஇதையடுத்து சுங்கத்துறை வசதிகளும் அதிகாரிகள்  வெள்ளை முள்ளம் பன்றி, குரங்கு குட்டி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு  குற்றப்பிரிவுக்கும்  தகவல் கொடுத்தனர். அவர்களும் வந்து விலங்குகளை ஆய்வு செய்கின்றனர். 

முறையான மருத்துவ பரிசோதனை  இல்லாமல் வந்துள்ளதால் இந்த விலங்குகள் மூலம் வெளிநாட்டு  நோய்க் கிருமிகள் நம் நாட்டு விலங்குகளுக்கு தோற்று பரவி   ஆபத்து ஏற்படும் , இதை மீண்டும்  தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்புவது சரியாக இருக்கும் என்று கூறினா். இதையடுத்து  திருப்பி அனுப்பிவைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வன விலங்குகளை கடத்தி வந்தவரை சுங்கத்துறை அதிகாரிகளும், மத்திய வனஉயிரின பாதுகாப்பு  குற்றப்பிரிவு அதிகாரிகளும்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via