மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை.

by Staff / 14-05-2024 05:14:32pm
மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை.

மதுரை அருகே புளியங்குளம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த மகாலிங்கம் (57), இவர் ஒப்பந்ததாரராக இருந்தார். இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென்று இறந்துவிட்டார். இதனால் மனம் உடைத்தவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மகன் பாண்டி கண்ணன், சிலைமான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via