ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை
அதிமுகவின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகிவையற்றை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசப்னையில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனையில் வைத்தியலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Tags :