நம்பிக்கையில்லா தீர்மானம் - விவாதம் தொடங்கியது

by Staff / 08-08-2023 01:24:33pm
நம்பிக்கையில்லா தீர்மானம் - விவாதம் தொடங்கியது

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் தற்போது நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி விவாதத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கௌரவ் கோகோய் எம்.பி. விவாதத்தை தொடங்கி பேசி வருகிறார். மேலும், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்த நிலையில் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது. எம்.பி. பதவியை திரும்பப் பெற்றதை தொடர்ந்து ராகுல்காந்தி நாடாளுமன்றம் திரும்பிய நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் நாளை விவாதம் தொடங்கியது.

 

Tags :

Share via

More stories

Logo