அதிமுக புதிய அவைத் தலைவர் யார்?  ஓபிஎஸ்-இபிஎஸ் ஆலோசனை

by Editor / 11-10-2021 06:37:57pm
அதிமுக புதிய அவைத் தலைவர் யார்?  ஓபிஎஸ்-இபிஎஸ் ஆலோசனை


அதிமுகவின் புதிய அவைத் தலைவரை தேர்வு செய்வது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.


அதிமுகவின் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் உடல்நலக் குறைவால் கடந்த சில நாள்களுக்கு முன் உயிரிழந்தார்.இந்நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் புதிய அவைத் தலைவரை நியமிப்பது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.இந்த கூட்டத்தில், அதிமுக பொன்விழா கொண்டாட்டம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories