கண்ணகி கோயில் சித்திரா பவுர்ணமி விழா கொடியேற்றம் கெடுபிடியோடு நடைபெற்றது.

by Editor / 05-04-2022 03:55:57pm
கண்ணகி கோயில் சித்திரா பவுர்ணமி விழா கொடியேற்றம் கெடுபிடியோடு நடைபெற்றது.


தமிழக கேரள எல்லை பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியிலுள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் வரும் 16 ஆம் தேதி சித்திரை முழுநிலவு விழா, மங்கலதேவி கண்ணகிவிழா, பூமாரிவிழா என முப்பெரும் விழா நடைபெறுகிறது. கண்ணகி கோவிலுக்குச் செல்ல கேரளமாநிலமான குமுளியிலிருந்து பாதுகாக்கப்பட்ட கேரள வனப்பாதை வழியாக ஜீப் செல்லும் வண்டிப்பாதையும், கூடலூர் அருகேயுள்ள பளியன் குயிலிருந்து தமிழக வனப்பகுதி வழியாக 6.6 கிலோமீட்டர் நடைபாதையும் உள்ளது. 
ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு பத்து நாட்களுக்கு முன்பாகவே பளியன்குடி ஆதிவாசி குடியிருப்பு பகுதியில் விழாவிற்கான கொடிமரம் நட்டு, கண்ணகி கொடி ஏற்றும் நிகழ்வு  நடைபெறுவைத்து வழக்கம்.. 

வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி நடைபெற உள்ள கண்ணகி கோவில் விழாவை முன்னிட்டு, இன்று லோயர் கேம்ப் அருகே உள்ள பளியன் குடியில் கண்ணகி உருவம் பதித்த  கொடியுடைய கொடிமரம் நடப்பட்டு கொடி ஏற்றப்பட்டது .முன்னதாக பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இதில்  கண்ணகி அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்கள், பளியங்குடி மக்கள் கலந்துகொண்டனர்.

பளியன் குடி வனப்பகுதி கூடலூர் வனச் சரகத்திற்கு உட்பட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதாலும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயமாக உள்ளதாலும் வனத் துறையின் கெடுபிடி அதிக அளவில் இருந்தது.
 

 

Tags :

Share via