குற்றாலம் பிரதான அருவியில் காட்டாற்று வெள்ளம் தடுப்பு வேலிகளை அடித்துச் சென்ற வெள்ளம்.

by Editor / 02-03-2025 11:29:39pm
குற்றாலம் பிரதான அருவியில் காட்டாற்று வெள்ளம் தடுப்பு வேலிகளை அடித்துச் சென்ற வெள்ளம்.

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளின் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலமாகும் மேலும் நவம்பர் டிசம்பர் ஜனவரி ஆகிய மூன்று மாதங்கள் சபரிமலை சீசன் காலமாகும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து கொட்டுவது வழக்கம் சுமார் 80 லட்சம் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வந்து நீராடி செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது. தற்பொழுது கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயில் துவங்கியதன் தொடர்ச்சியாக அருவிகளில் நீர்வரத்து குறைந்து கொஞ்சமாக கொட்டி வந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பேரருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட  அனைத்து அருவி களில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குற்றாலம் பேரருவியிக் இரண்டாவது நாளாக இன்றும் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது வெள்ளப்பெருக்கின் காரணமாக அறிவிப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன மேலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தொடர்ந்து தடை நீடித்து வருகின்றது பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

Tags : குற்றாலம் பிரதான அருவியில் காட்டாற்று வெள்ளம் தடுப்பு வேலிகளை அடித்துச் சென்ற வெள்ளம்.

Share via