அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் உயிரிழப்பு
அமெரிக்காவின் 65வது வெளியுறவுத்துறை அமைச்சர் கொலின் பவுல்.இவர் பூர்வீகத்தில் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கர். இவர் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றிய 2001 முதல் 2005 காலகட்டத்தில் தான் ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தது. அந்த போரில் கொலின் அமெரிக்கா முப்படைகளின் தலைமை தளபதியாக செயல்பட்டது பலரது பாராட்டுக்களை அள்ளிக்குவித்தது.
தற்போது 84 வயதாகும் கொலினுக்கு கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி கொலின் பவுல் உயிரிழந்தார். முன்னாள் அமைச்சர் கொலினின் மறைவிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்
Tags :