திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் தொடங்கியது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் நேற்று தொடங்கியது. நேற்று இரவு சீதா, லட்சுமணர் , ஆஞ்சநேயர் சமேத கோதண்டராமர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்த்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று இரவு ருக்மணி சமேத கிருஷ்ணர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். 11,12,13 ஆகிய மூன்று நாட்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். தெப்ப உற்சவத்தை காண வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்
Tags :