ஆன்லைன் மூலம் வாலிபரிடம் ரூ. 4. 13 லட்சம் பறிப்பு
சேலம் அழகாபுரம், பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் பரணிதரன் ( வயது 33). என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் பல்வேறு இடங்களில் வேலை தேடிவந்துள்ளார். இந்த நிலையில் இவரது செல்போனுக்கு ஆன்லைனில் வேலை இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து வாட்ஸ்அப் - ல் வந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்ட விவரங்களை தெரிவித்தார். இந்த தகவல்களை பெற்ற மர்ம நபர்கள், பரணிதரன் வங்கிக் கணக்கில் இருந்து, பல்வேறு தவணைகளாக ரூ. 4, 13, 000 பணத்தை எடுத்துக் கொண்டனர். ஆனால் வேலை வாங்கி கொடுக்கவில்லை. தன்னை நூதனமாக ஏமாற்றியதால் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :