சென்னையில் 46 வது புத்தக கண்காட்சி

by Admin / 26-12-2022 09:59:03pm
சென்னையில் 46 வது புத்தக கண்காட்சி

சென்னையில் 46 வது புத்தக கண்காட்சியை வரும் ஜனவரி 6ஆம் தேதி 5.30 மணிக்கு  ஒய்.எம்.சி மைதானத்தில் தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கஉள்ளதாக பதிப்பாளா் சங்க தலைவா் வைரவன் தெரிவித்தாா்.6ஆம் தேதி தொடங்கும் புத்தக கண்காட்சி 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது 800 அரங்குகள் அமைக்கப்படஉள்ளது.முதல் முறையாக திருநங்கைக்கு ஓர் அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.ஜனவரி 16-18 ஆம் தேதி மூன்று நாள்கள் சர்வதேச புத்தக காட்சியும் இங்கே நடைபெற உள்ளது.40 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பதிப்பாளர்கள்வர உள்ளனர்.தினம் காலை 11.00 மணி முதல் இரவு 9.00மணிவரை கண்காட்சி நடைபெறும்.புத்தக கண்காட்சிதொடக்கவிழாவில் 2023 ஆம் ஆண்டிற்கான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதும் சிறந்த பதிப்பாளர்மற்றும் பபாசி விருதையும் முதலமைச்சர் வழங்குகிறார்.விழாவில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும்கலந்து கொள்கிறார்.

 

Tags :

Share via

More stories