மண் எடுக்க..தடையை நீக்கிய தமிழக அரசு
செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்டம் செய்பவர் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மணல் எடுக்கலாம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது.
அரசாணையில் திருத்தம் செய்து மண் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி இருக்கிறது தமிழக அரசு. முன்னதாக சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுத்தான் மண் எடுக்க வேண்டும் என்ற நடைமுறை இருக்கும்போது சாமானிய மக்கள் பெருமளவில் பாதிக்கப் பட்டார்கள். எங்களது தொழிலை நாங்கள் செய்து கொள்கிறோம். ஆனால் அதற்கு தேவையான மண்ணை மட்டும் எடுப்பதற்கு சுதந்திரம் தாருங்கள் என்று மன்றாடி பார்த்தார்கள்.
காலம் காலமாக இந்த கோரிக்கையை அவர்கள் தொடர்ந்து வைத்துக்கொண்டே இருந்தார்கள். இந்த சூழலில் செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழில் செய்வோர் சுற்றுச்சூழல் அனுமதி இல் லாமல் மண் எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது.
Tags :