ஊரடங்கு : பொது போக்குவரத்து, படப்பிடிப்பிற்கு அனுமதி

by Editor / 20-06-2021 04:56:02pm
ஊரடங்கு : பொது போக்குவரத்து, படப்பிடிப்பிற்கு அனுமதி

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தொற்று பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்களை மூன்றாகப் பிரித்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் வகை மூன்றில் உள்ள நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் பொது போக்குவரத்துக்கும், படப்பிடிப்பிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது...

பொது போக்குவரத்துக்கு அனுமதி:

  • மாவட்டத்திற்குள் பொது போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மெட்ரோ ரயில் போக்குவரத்து, 50% பயணிகளுடன் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கிடையே பொது போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பிற்கு அனுமதி:

  • திரைப்படம் மற்றும் சின்னதிரை படப்பிடிப்புகள் 100 நபர்கள் மட்டும் பணிபுரியும் வகையில் நடத்த அனுமதி.
  • படப்பிடிப்பில் பங்கேற்கும் பணியாளர்கள் / கலைஞர்கள் அவசியம் கரோனா பரிசோதனை மேற்கொண்டு படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும்.
  • படப்பிடிப்புகளுக்கு பிந்தைய தயாரிப்பு பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி.
 

Tags :

Share via