வெடிவிபத்து: பட்டாசு ஆலை மற்றும் உரிமையாளர் பெயர் வெளியானது

by Staff / 29-06-2024 11:25:23am
வெடிவிபத்து: பட்டாசு ஆலை மற்றும் உரிமையாளர் பெயர் வெளியானது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருவாய், தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையில் சம்பவம் நடைபெற்ற குறித்த பட்டாசு ஆலையின் பெயர் குருஸ்டார் என தெரியவந்துள்ளது. அதன் உரிமையாளர் பெயர் சகாதேவன் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo