இன்று ராஜீவ்காந்தியின் 77-வது பிறந்தநாள்... தலைவர்கள் மரியாதை!

by Admin / 20-08-2021 01:20:29pm
இன்று ராஜீவ்காந்தியின் 77-வது பிறந்தநாள்... தலைவர்கள் மரியாதை!

ராஜீவ்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

ராஜீவ் காந்தியின் 77வது பிறந்த நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 20, 1944-ல் பிறந்த ராஜீவ் காந்தி, 1984 முதல் 1989 வரை இந்த தேசத்தின் பிரதமராக பணியாற்றியவர். 1991-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் காங்கிரசால் சத்பவான திவாஸ் - ஆக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி டெல்லியில் உள்ள வீர்பூமியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தந்தையின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். ராஜிவ் காந்தி நினைவிடத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

Tags :

Share via