துப்பாக்கி சூடு... 4 சிறுவர்கள் படுகாயம்.

by Editor / 25-08-2022 04:48:58pm
துப்பாக்கி சூடு... 4 சிறுவர்கள் படுகாயம்.

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சிகாகோவில் ஒரு உயர்நிலைப்பள்ளி அருகே ஐஸ்கிரீம் விற்பனை கடை உள்ளது. இங்கு நேற்று மதியம் மர்மமனிதன் ஒருவன் திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியால் பொதுமக்கள் மீது சரமாரியாக சுட்டான். பின்னர் அவன் வாகனத்தில் ஏறி தப்பி விட்டான். இந்த துப்பாக்கிசூட்டில் 4 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 15 வயது சிறுவன் முகம் மற்றும் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவனது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமி யார்? என்று தெரியவில்லை.

 

Tags :

Share via

More stories