ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயம்.

by Staff / 11-10-2025 09:18:41am
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்ட‌தால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வரும் 20ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், 17, 18ஆம் தேதிகளில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை-கோவை இடையே டிக்கெட் கட்டணம் ரூ.2,000-ரூ.3,000 ஆகவும், சென்னை-மதுரை கட்டணம் ரூ.2,000-ரூ.3,200 ஆகவும் உயர்ந்தப்பட்டுள்ளது. சென்னை-நெல்லை ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.3,500, ஏ.சி. இருக்கை கட்டணம் ரூ.2,700ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் தென் மாவட்டங்களுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டடுவருதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

 

Tags : ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயம்.

Share via