ரவுடியுடன் உல்லாசமாக இருந்த பெண்....பட்டா கத்திகளால் சரமாரியாக வெட்டியா கணவன்
கர்நாடக மாநில ஆனைகல் ஜிகினி கிராமத்தைச் சேர்ந்த. கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த அர்ச்சனா ரெட்டி இரண்டு வருடங்களுக்கு முன் முதல் கணவரை நீதிமன்றம் மூலம் பிரிந்து, நவீன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். சில நாட்களாக சந்தேகம் கொண்ட கணவர் நவீன், மனைவியிடம் தினமும் சண்டையிட்டு வந்தார். அர்ச்சனா ரெட்டி ரவுடி ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக தெரிகிறது நவீன் கண்டிக்கவே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. சொத்து பிரச்சினையும் இருந்ததாக கூறப்படுகிறது. இந் நிலையில் நேற்று அர்ச்சனா ரெட்டி காரில் சொந்த ஊரான ஜிகினி வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று இரவு அவர் காரில் வீட்டுக்கு திரும்பும்போது பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே காரை வழிமறித்த நவீன் அர்ச்சனா ரெட்டியை காரிலிருந்து கீழே இறக்கி பட்டா கத்தியில் சரமாரியாக வெட்டியுள்ளார். படுகாயமடைந்த அர்ச்சனா ரெட்டி ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்பிறகு நவீன் நண்பர் சந்தோஷ் அங்கிருந்து தப்பி சென்றனர்.இரவு என்பதால் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. சில வாகன ஓட்டிகள் எலக்ட்ரானிக் சிட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அர்ச்சனா ரெட்டி உடலை கைப்பற்றி ஆனைக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அர்ச்சனா ரெட்டியின் மகன் அளித்த புகாரின் பேரில் நவீன் அவரது நண்பர் சந்தோஷை வலைவீசி தேடி வருகின்றனர்
Tags :