நெல்லை பாளையங்கோட்டையை இணைக்கும் சுலோச்சனா முதலியார் பாலத்திற்கு இன்று 179 வது பிறந்தநாள் விழா.

by Editor / 27-11-2021 11:25:38pm
நெல்லை பாளையங்கோட்டையை இணைக்கும் சுலோச்சனா முதலியார் பாலத்திற்கு இன்று 179 வது பிறந்தநாள் விழா.

 நெல்லை மண்ணில் தனிமனித கொடை வள்ளல் சுலோச்சன முதலியார்  இவர் கட்டிய பாலம் தான் திருநெல்வேலியில் தாமிரபரணி நதியின் மேல் அமையப்பெற்றுள்ளது. நெல்லை பாளையங்கோட்டையை இணைக்கும் இந்தப் பாலத்திற்கு 179 ஆவது பிறந்த நாள் விழா இன்று.

 கொக்கிரகுலம் சுலோச்சன முதலியார் பாலத்தின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த கல்வெட்டில் ஒருங்கிணைப்பாளர் கணபதி சுப்பிரமணியன் மற்றும் வரலாற்று ஆய்வாளர் டாக்டர் சண்முகம் ஆகியோர் தலைமையில் வழக்கறிஞர்கள் திருமலையப்பன்,முத்துசுவாமி, முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சுலோச்சனா முதலியாரின் ஆறாவது தலைமுறை பக்தவத்சலம், அவரது துணைவியார் கமலம், மகள் கீர்த்தி, ஆகியோர் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்கள். பின்னர் சுலோச்சன முதலியார் பாலத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.  மாநகர காவல்துறை ஆணையாளர் சுரேஷ்குமார், சுலோச்சனமுதலியாருடைய வாரிசுகளை பாராட்டி பொன்னாடை போர்த்தி, புத்தகங்கள் பரிசு வழங்கினார்.
 

 

Tags :

Share via

More stories