பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக நியூசிலாந்து செல்கிறார்.

by Admin / 04-07-2026 06:52:22pm
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக  நியூசிலாந்து செல்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஆறு நாட்கள் இந்தோ பசிபிக் நாடுகளுக்கு செல்கிறார். அதன்படி அவர் ஜூலை 6ஆம் தேதி இந்தோனேசியாவிற்கும் ஆஸ்திரேலியா மெல்போன் நகரில் நடக்கும் நிகழ்வுகளிலும் பங்கேற்று இந்திய வம்சாவளியினரையும் சந்திக்க உள்ளார். அதன் பின்னர் அவர் நியூசிலாந்து செல்கிறார். கடந்த 1986 ஆம் ஆண்டு பிரதமர் ராஜீவ் காந்தி நியூசிலாந்து சென்றிருந்தார் . அதன் பிறகு 40 ஆண்டுகள் கழித்து இந்திய பிரதமர் ஒருவர் நியூசிலாந்து செல்வது இதுவே முதல் முறையாகும்.  பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு நியூசிலாந்துக்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும். அவர் ஜூலை 10ஆம் தேதி ஆக்கிலாந்து சென்று அங்கு நியூசிலாந்து  பிரதமர் கிரிஸ்டோபர் லக்ஷ்னுடன் இரு நாடுகளின் உடைய உறவுகள்  குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறார். நியூசிலாந்து எதிர்க்கட்சி தலைவரையும்  அங்குள்ள வணிகப் பிரதிநிதிகளையும் பிரதமர் சந்திக்க உள்ளார்.  ஆறு நாட்கள் பயணம் முடித்து பதினோராம் தேதி பிரதமர் மோடி இந்தியா திரும்புகிறார்.

 

Tags :

Share via

More stories

Logo