மதுரை அருகே திருமணமான 3 ஆண்டுகளில் பெண் தற்கொலை

by Admin / 29-07-2021 04:29:37pm
மதுரை அருகே திருமணமான 3 ஆண்டுகளில் பெண் தற்கொலை



மதுரை அருகே குடும்ப தகராறு காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை அருகே உள்ள திருப்புவனம் பழையனூரைச் சேர்ந்த முத்துப்பாண்டி மனைவி ஆதிலட்சுமி (வயது 23). இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது.

 முத்துப்பாண்டி- ஆதிலட்சுமி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆதிலட்சுமி கணவருடன் கோபித்துக்கொண்டு மதுரை அருள்தாஸ்புரம் பாலமுருகன் கோவில் தெருவில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஆதிலட்சுமி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து செல்லூர் இன்ஸ்பெக்டர் மாடசாமி உத்தரவின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஜான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதிலட்சுமி மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via

More stories