பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் மனு அளித்த எம்எல்ஏ

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி சார்ந்த கோரிக்கை மனுவை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் வழங்கினார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, நேற்று திருச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் நேரில் சந்தித்து பேசினர். அப்போது தனது தொகுதி சார்ந்த கோரிக்கையும், குறிப்பாக பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்த மனுவினை அளித்து, அதனை நிறைவேற்ற வேண்டும் என கேட்டு கொண்டார். அப்போது திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags :