திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக சரித்திரம் இல்லை: ஓ.பன்னீர்செல்வம்
விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக நிர்வாகி கள் ஆலோசனைக்கூட்டம் நேற்றுநடைபெற்றது. முன்னாள் அமைச் சர் ஓ.எஸ். மணியன் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச் சர் சி.வி. சண்முகம் முன்னிலை வகித்தார். எம்எல்ஏக்கள் சக்கர பாணி, அர்ஜூணன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பேசியது:
அதிமுக 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்டு வருகிற 17-ம் தேதி 50-ம் ஆண்டு பொன்விழா கொண்டாட உள்ளது. தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினையான காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை மத்திய அரசின் அரசாணையில் வெளியிட திமுக முயற்சிக்கவில்லை. அதற்கு ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை சென்று அரசாணையை வெளியிட வைத்தார். அதிமுக மீது மக்களுக்கு எவ்வித வெறுப்பும் இல்லை. சில வியூகங்களால் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம். ஆட்சிக்கு வரும் முன் திமுக 505 வாக்குறுதிகளை அளித்தது.தேர்தலுக்கு முன் திமுக கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்றியதாக சரித்திரம் இல்லை. அதிமுகவின் பொன்விழா பரிசாக நடைபெற உள்ள தேர்தலில் முழுமையான வெற்றியை பெற நாம் பாடுபடவேண்டும் என்றார்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியது:
மக்களுக்கு இந்த ஆட்சி மீது எதிர்மனநிலை உருவாகியுள்ளது. பண்ருட்டியில் எம்பி யின் முந்திரி தொழிற்சாலையில் இறந்தவர் தொடர்பாக வழக்கு சந்தேக மரணம் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு தற் போது நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை நடத்தி வரும் அரசுவழக்கறிஞரை இடமாற்றம் செய்து,காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளனர். எப்போது தேர்தல் வந்தாலும் அடுத்து அதிமுக ஆட்சிதான் என்றார்.
Tags :