மு.க.ஸ்டாலினிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற உதயநிதி

by Staff / 27-11-2023 01:10:37pm
மு.க.ஸ்டாலினிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற உதயநிதி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி, எனது பிறந்த நாளை முன்னிட்டு, ஈன்றெடுத்த பெற்றோர் கழகத்தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் - அன்னையார் அவர்களிடமும் இன்று காலை வாழ்த்துகளைப் பெற்றேன். அயராது உழைக்கவும் - அன்பின் வழி நடக்கவும் எந்நாளும் வழிநடத்தும் தாய் - தந்தையரின் வாழ்த்தை பெற்ற மகிழ்வான தருணத்திலிருந்து இந்த நாளை தொடங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via