விமானத்தை பாதுகாக்க சென்ற 2 விமானங்கள்

இத்தாலிய விமானப்படை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இரண்டு யூரோஃபைட்டர்கள் டெல்லி நோக்கிச் செல்லும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் (AA292) விமானத்தை அடையாளம் கண்டு அதனை பத்திரமாக அழைத்துச்செல்ல புறப்பட்டன. அந்த விமானத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கூறப்பட்டதால், அந்த விமானம் ஃபியூமிசினோ விமான நிலையத்தை (RM) நோக்கித் திரும்பியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் 199 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
Tags :