நரேந்திர மோடி வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு வாழ்த்து
வங்காளதேச பொதுத் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனாவும் அவரது கட்சியான அவாமி லீக் கட்சியும் மீண்டும் வெற்றி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில், தொடர்ந்து நான்காவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த தேர்தலை எதிர்க்கட்சியான பிஎன்பி கட்சியும், மற்ற கட்சிகளும் புறக்கணித்துள்ளது தெரிந்ததே.
Tags :