பேஸ்புக் நட்பால் 24 மணிநேரத்தில் ரூ.5.5 லட்சம் இழந்த இளைஞர்

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் பேஸ்புக்கில் பெண் பெயரில் வந்த நட்பை ஏற்றுள்ளார். அவரிடம் வாட்சப் நம்பரையும் பகிர்ந்து பேச தொடங்கிய ஒரே நாளில் இளைஞரின் போட்டோவை மார்பிங் செய்து அனுப்பிய பெண் 24 மணிநேரத்தில் மிரட்டி வெவ்வேறு தவணையாக ரூ.5.5 லட்சத்தை பறித்துள்ளார். விசாரணையில் ஆண் ஒருவர் நிர்வகித்த போலியான கணக்கு குறித்த தகவல் அம்பலமானது. இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :