திருமணமான 5 மாதத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்

ஹரியானா: ராகுல் - மோனா தம்பதிக்கு 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்நிலையில் மோனா, கணவர் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். மோனா குடும்பத்தார் கூறுகையில், "திருமணத்தின் போது ராகுலுக்கு கார், ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்தோம். ஆனால் கூடுதல் வரதட்சணை கேட்டு அவர் குடும்பத்தார் மோனாவை துன்புறுத்தி வந்தனர், ராகுலும் அவர் குடும்பமும் தான் மோனாவை கொன்றனர்" என கூறினர். ராகுலை போலீஸ் கைது செய்து விசாரிக்கிறது.
Tags :