கை விலங்குடன் வரிசையாக உட்கார வைக்கப்பட்ட பெண்கள்

by Admin / 17-02-2022 03:11:34pm
கை விலங்குடன் வரிசையாக உட்கார வைக்கப்பட்ட பெண்கள்

பீகார் மாநிலத்தில் மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. மணல் கொள்ளைகளை தடுக்க ஆளில்லா விமானங்கள் மூலம் சட்டவிரோத சுரங்கங்கள், குவாரிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.

மணல் சுரங்கங்களை வரைமுறைப்படுத்த அவற்றை ஏலம் விட அரசு முடிவு செய்தது. அதன்படி கயா மாவட்டத்தில் உள்ள மணல் சுரங்கங்கள், குவாரிகளை ஏலம் விட அதிகாரிகள் சென்றனர். அப்போது சட்டவிரோத மணல் குவாரிகளில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர். எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் திடீரென போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர்.  அவர்களை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
 
அப்போது ஆண்கள் மற்றும் பெண்கள் என பலரை கைது செய்தனர். கைது செய்த பெண்களை  விலங்கிட்டு வரிசையாக உட்காரவைக்கப்பட்டனர்.

 

Tags :

Share via