இன்று முதல் புக்கிங் செய்பவர்களுக்கு  ரூ.918க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்.

by Editor / 30-08-2023 08:39:53am
இன்று முதல் புக்கிங் செய்பவர்களுக்கு  ரூ.918க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்.

 சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை இன்று முதல் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாய் வரை குறைக்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டில் ரூ.1118க்கு விற்பனையான வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.200 குறைந்து ரூ.918க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் யாரும் கூடுதல் விலை கொடுக்க வேண்டாம் எனவும் அதேசமயம், நேற்று (29.08.23) சிலிண்டர் தேவைக்கு புக் செய்தவர்களுக்கு பழைய விலையில் மாற்றம் இருக்காது அவர்களுக்கு ரூ.1118 என்ற விலையில் தான் சிலிண்டர் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :  சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை

Share via