மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் ஓபிஎஸ்

by Staff / 12-11-2022 11:50:03am
மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கும் ஓபிஎஸ்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தமிழகம் வந்தடைந்தார். டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார். இன்று காலை 11.05 மணிக்கு ராஜ்பவனில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்கு 11.25 மணிக்கு வருகிறார். பின்பு, 11.30 மணி முதல் பிற்பகல் 12.50 வரை நடக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகிறார். இதனிடையே, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 

Tags :

Share via

More stories