டிராக்டர் மீது பைக் மோதி விபத்து

by Staff / 26-03-2022 03:54:15pm
டிராக்டர் மீது பைக் மோதி விபத்து

நெல்லைமாவட்டம்  நான்குநேரி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ரேஸ் பைக்கை முன்னால்  டிராக்டர் முந்திச் செல்ல முயன்ற போது அதன் மீது மோதியதில் பைக்கில் தூக்கி வீசப்பட்டு உடைந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.

இதில் பைக்கை ஓட்டி வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார் நாகர்கோவிலை சேர்ந்த 20 வயதுடைய உதயா என்பவர் தனது டுகட்ட் ரேஸ் பைக்கில் ஏற்பட்டு இருந்த சிறு பழுதை சரிசெய்ய அதே பைக்கில் சென்றுள்ளார் வாகைகுளம் அருகே நான்கு வழி சாலை பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற ட்ராக்டர் முந்த முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதி விபத்து நிகழ்ந்ததாக சொல்லப்படும் நிலையில் டிராக்டர் ஓட்டுநர் அச்சமடைந்து உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

 தகவலறிந்து சென்ற நாங்குநேரி போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தப்பிச் சென்ற டிராக்டர் ஓட்டுநரை தேடி வருகின்றனர்

 

Tags :

Share via