அதிமுக பிரமுகர் மகன் காஞ்சியில் வெட்டிக் கொலை

காஞ்சிபுரம் அடுத்த காரைப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜேக்கப். அதிமுகவில் கிளை செயலராக உள்ளார். இவருக்கு மூன்று மகன்கள். இதில், மூத்த மகனான ஆனந்த் (31), வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வாகன உரிமம், எப்.சி., புதுப்பித்தல் உள்ளிட்ட வேலைகளை 'கமிஷன்' அடிப்படையில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஆனந்துக்கு, மொபைலில் அழைப்பு வந்துள்ளது. உடனடியாக, புறப்பட்டு சென்றுள்ளார். அதன்பின், நேற்று காலை வரை வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், காரைப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே துரித உணவகத்தின் முன், ஆனந்த் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags :