ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

by Staff / 12-02-2025 01:07:46pm
 ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் அஜீஸ் நகரில் வசித்து வந்த முத்து, அவரின் மனைவி தேவி மற்றும் மகன் பிரவீன்குமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். முத்து தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் மனைவி மற்றும் மகனின் சடலங்கள் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via