தொழிலதிபர் கொலை வழக்கில் மூன்று பேர் சிறையில் அடைப்பு

by Staff / 27-10-2022 05:26:30pm
 தொழிலதிபர் கொலை வழக்கில் மூன்று பேர் சிறையில் அடைப்பு

தஞ்சை மருத்துவக் கல்லூரி நான்காவது கேட் பூக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் ராஜ்மோகன் வயது 42 தொழிலதிபரான இவர் கடந்த 19ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் தஞ்சையிலிருந்து கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார் அப்போது சடையங்கால் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் மற்றும் அடையாளம் தெரியாத மூன்று பேர் உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து ராஜ்மோகனை கடத்தி சென்று அரித்துவாரமங்கலம் பகுதியில் பணம் கேட்டு மிரட்டி அவரை கொலை செய்தனர் இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சடையங்கள் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் புதுச்சேரியை சேர்ந்த ராஜேஷ் நீடாமங்கலத்தை சேர்ந்த விவேக் உள்ளிட்டோர் இட்டு மூன்று பேர் மன்னார்குடி கோர்ட்டில் கடந்த 20ஆம் தேதி சரணடைந்தனர் நீதிபதி மூன்று பேரையும் காவலில் வைக்க உத்தரவிட்டார் இதையடுத்து செல்வகுமார் ராஜேஷ் விவேக் ஆகிய மூன்று பேரும் பாபநாசம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர் அம்மாபேட்டை போலீசார் பாபநாசம் கோர்ட்டில் காவல் நீட்டிப்பு பெற்றனர் இதையடுத்து மூன்று பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo